காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு - 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Jul 10, 2018 11:53 AM 1099

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தின் குண்டாலன் பகுதியில் தீவிரவாதிகள் பதுணகி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அப்பகுதியில் 34 ஆர்.ஆர். படை பிரிவை சேர்ந்த மத்திய ரிசர்வ் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதிலடியாக கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Comment

Successfully posted