ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜராகி விளக்கம்

Aug 21, 2018 02:54 PM 558

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அப்போலோ மருத்துவர்களான அருள்செல்வன், ரவிக்குமார் ஆகியோர் நேற்று ஆஜராகி ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நரம்பு தொடர்பான சிகிச்சை அளித்ததாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மயக்க மருந்து வல்லுநரான டாக்டர் பாஸ்கர் மற்றும் டாக்டர் செந்தில் குமார் ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு இன்று ஆஜராகினர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

Comment

Successfully posted