ராகுல்தான் கிங்ஃபிஷர் ஓனர் - புதுகுண்டு போடும் பா.ஜ.க.

Sep 14, 2018 07:22 PM 581

மல்லையா லண்டன் தப்பிக்க ஜேட்லி உதவினார் என ராகுல் கூறிக்கொண்டிருக்க, கிங்பிஷர் ஓனரே ராகுல் காந்தி தான் எனக் கூறி புதுகுண்டை போட்டுள்ளது பா.ஜ.க.

இதற்கான சில ஆவணங்களையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.


டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா, 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்திற்கு விதிகளை மீறி பொதுத்துறை வங்கிகள் கடன் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மல்லையாவுக்கு கடன் கொடுக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பொதுத்துறை வங்கிகளை நிர்பந்தம் செய்தனர் என்பதும் சம்பித் பாத்ராவின் குற்றச்சாட்டு.

கிங்பிஷர் நிறுவனத்திற்கு ஆதரவாக சோனியா குடும்பம் செயல்பட்டதில் இருந்தே அந்த நிறுவனத்தின் மறைமுக உரிமையாளர்கள் இவர்கள் தான் என்பது தெரியவருவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் சோனியாவும், ராகுலும் எங்கு சென்றாலும், கிங்ஃபிஷர் விமானத்தையே பயன்படுத்தியது அனைவருக்கும் தெரிந்ததுதான் என அவர் கூறினார்.

கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கும் சோனியா குடும்பத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளுக்கான ஆதாரம் என்று கூறி சம்பித் பாத்ரா சில ஆவணங்களையும் வெளியிட்டார்.

Related items

Comment

Successfully posted

Super User

Nice


Super User

Good Article


Super User

இருக்கலாம்


Super User

அப்படி போட்ரா சக்கை!