இணையத்தில் வைரலாகும் ரஜினியின் புது கெட்டப்

Oct 06, 2018 01:59 PM 563

இணையத்தில் வைரலாகும் ரஜினியின் புது கெட்டப்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் பேட்ட. டேராடூனில் முதல்கட்ட படபிடிப்பு முடிந்த நிலையில் வாரணாசியில் இரண்டாம் கட்ட படபிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் பெரிய மீசையுடன் இளமையான தோற்றத்தில் ரஜினி காட்சி அளிக்கிறார். அதே கெட்டப்பில் பேட்ட படபிடிப்பில் அவர் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

ஆட்டோவில் இறங்கி நடந்து வருவது போலவும், மசூதி ஒன்றில் கட்டிலில் அமர்ந்துள்ளது போலவும் அந்த புகைப்படங்கள் உள்ளன. ஏற்கனவே வெளியான புகைப்படங்களில் வித்தியாசமான சிவப்பு நிற ஆடையில் தோன்றி இருந்த ரஜினிகாந்த், இந்த புகைப்படங்களிலும் இளமை கெட்டப்பில் இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பேட்ட திரைப்படமும் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

Comment

Successfully posted