ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்

Sep 04, 2018 01:03 PM 640

மீன்பிடிச் சட்டத்தின் மூலம் தமிழக மீனவர்களின் 192 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை இலங்கை அரசுடமையாக்கி உள்ளது. இலங்கை அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை வசம் உள்ள படகுகளை மீட்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 850க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

Related items

Comment

Successfully posted