ராமேஸ்வரம் மீனவர்கள் 3 வது நாளாக வேலைநிறுத்தம்

Sep 05, 2018 02:45 PM 624

இலங்கை கடற்டையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத் தர வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 3 வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக க்கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். தொடர்கதையாகும் இப்பிரச்சனையில் கைது செய்யும் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், பறிமுதல் செய்யப்படும் படகுகளை இலங்கை அரசு திருப்பித் தருவதில்லை. இதனை கண்டித்தும் பறிமுதல் செய்யப்பட்ட 192 விசைப் படகுகளை மீட்டுத் தரக்கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் 3 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து அனைத்து கட்சியினருடன் இணைந்து 7ம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted