தாய்லாந்து குகையில் 8 சிறுவர்கள் மீட்பு

Jul 10, 2018 12:07 PM 1102

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்களில் இதுவரை 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் அந்நாட்டை சேர்ந்த பள்ளி கால்பந்து அணி வீரர்கள் மாட்டிக் கொண்டனர். மலையேற்ற பயிற்சிக்கான சென்றவர்கள், மழை காரணமாக குகைக்குள் சிக்கினர். தற்போது அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களுடன், தாய்லாந்து பாதுகாப்பு படையினரும் மீட்பு பணீயில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 2கட்ட மீட்பு பணியில் 8 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்பதற்காக 3வது கட்ட பணி தொடங்கி உள்ளது.

 

Comment

Successfully posted