நாடாளுமன்ற தேர்தல் : தயாராகிறது பேஸ்புக்..! 

Oct 07, 2018 04:16 PM 593
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நவம்பரில் தொடங்கவுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களை  கருத்தில் கொண்டு, சர்சைக்குரிய பேஸ்புக் பதிவுகளை தடுக்கும் வகையில், பேஸ்புக் நிறுவனம் வல்லுனர் குழுவை அமைத்துள்ளது.
 
தேர்தல் சுதந்திரமாக நடைபெற தங்கள் வலைதளம் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
அரசியல் தலைவர்கள் குறித்து பொதுமக்கள் உரையாடுவதை வரவேற்கும், அதேவேளையில், வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் பதிவுகளை தடுக்கும் வகையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted