வாஜ்பாயின் அஸ்தி கலசத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

Aug 23, 2018 02:22 PM 711

 

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய், கடந்த 16- ஆம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள புனித நீர்நிலைகளில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாஜக மாநில தலைவர்கள் அனைவரிடமும் அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்பட்டது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்தி கலசத்திற்கு திமுக செயல் தலைவர் மு..ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மரியாதை செலுத்தினர். கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, திருச்சி, ஈரோடு மற்றும் சென்னை என 6 இடங்களில் அஸ்தி கரைக்கப்படுகிறது.

 

Comment

Successfully posted