விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உருக்கம்

Sep 01, 2018 11:44 AM 714

கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சைப் பெற்று வருகிறார். அண்மையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவிட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இந்தநிலையில் நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை முடிந்ததும், விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது தந்தை விஜயகாந்த் பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மகன் விஜய பிரபாகரன் உருக்கமாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Comment

Successfully posted