திரிஷாவின் 'மோகினி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Jul 17, 2018 05:54 PM 771

தமிழ் மட்டுமல்லாது  தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நாயகியாக வருபவர் நம்ம திரிஷா. இளம் நடிகைகளுக்கு இணையாக இப்போதும் ஆறு படங்களில் பிசியாக உள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர், தற்போது நடித்து முடித்துள்ள  மோகினி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வரும் 27ம் தேதி வெளியாகும் இப்படத்தில் திரிஷாவுடன் பாக்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை திரிஷா தற்போது, அரவிந்த்சாமியுடன் சதுரங்க வேட்டை 2, விஜய் சேதுபதியுடன் 96, கர்ஜனை, 1818 ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted