பரியேறும் பெருமாள் - புதிதாக என்ன சொல்கிறார் ரஞ்சித்! 

Sep 11, 2018 03:27 PM 821

பரியேறும் பெருமாள் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் இடம்பெற்ற, எங்கும் புகழ், அடைபடும் கதவுக்குள் உடைபடும் உயிர். கருப்பி, அட கருப்பி, வா ரயில் விட போலாமா, நான் யார், பொட்ட காட்டில் பூ வாசம் ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டன. 

இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் புரடெக்ஷன் தயாரித்துள்ளது. வழக்கமாக ரஞ்சித் படங்களில் இந்தியா முழுவதும் நிலவி வரும் சாதி அமைப்பு முறைகள் பற்றி விவரிக்கப்படும். புரட்சிகரமான கருத்துக்கள் இடம்பெற்று இருக்கும். இதனால் ரஞ்சித்திற்கு எதிர்ப்புகள் கிளம்புவதும் உண்டு. 

இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் பாடல்களிலும் ரஞ்சித்தின் சிந்தனை சார்ந்த வரிகள் இடம்பெற்றுள்ளன.   ரஞ்சித் பாடல் எழுதவில்லை என்றாலும் இந்த படத்திலும் சாதி நெடி இருப்பது உணரப்படுவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.  

 

 

 

Related items

Comment

Successfully posted