உயிரிழந்த காவலர்களுக்கு முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிதி

Jul 14, 2018 05:33 PM 639

பல்வேறு விபத்துக்களின் மூலம் உயிரிழந்த காவலர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துக்களின் மூலமாக உயிரிழந்த காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். காவல்துறையின் பல பிரிவுகளில் பணியாற்றி பல்வேறு விபத்துக்கள் மூலமாக உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

Comment

Successfully posted