பொறியியல் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

Aug 23, 2018 02:57 PM 349

தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்தநிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல், துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 26- ஆம் தேதி முதல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்காக அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. வரும் 25- ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது. மேலும் தொழில் கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 27- ஆம் தேதியும், அருந்ததியினர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்குவதற்கான கலந்தாய்வு வரும் 28- ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

Comment

Successfully posted