கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி !- மு.க.அழகிரி

Aug 21, 2018 04:13 PM 497

 

கருணாநிதி நினைவிடம் நோக்கி வரும் 5ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று மு.க. அழகிரி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரிக்கும் இடையே மோதல் வலுத்துள்ளதாக கூறப்படுகிறது. கருணாநிதி நினைவிடத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அழகிரி, ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வரும் 5ஆம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்த இருப்பதாக கூறினார். இதில், சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும், கருணாநிதி வழியில் செயல்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அழகிரியின் பேரணி அறிவிப்பு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    

 

Comment

Successfully posted