ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

Jul 23, 2018 01:40 PM 892

 

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.  இதனால் அதிருப்தியில் இருந்த ஈரான் அதிபர் ரவுகானி,  சிங்கத்தின் வாலைப்பிடித்து விளையாடினால், பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவை ஈரானால் ஒருபோதும் அச்சுறுத்த முடியாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தள்ளார். மீறியும் அச்சுறுத்த நினைத்தால், இதற்கு முன் வரலாற்றில் கண்டிராத கடும் விளைவுகளை, ஈரான் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comment

Successfully posted