கருணாநிதி நலமுடன் இருக்கிறார் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

Jul 27, 2018 04:28 PM 933

சிறுநீரக தொற்று காரணமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது உடல்நலத்தில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்தநிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றனர். அவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், கருணாநிதியின் உடல்நலம் குறைத்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கருணாநிதி விரைவில் குணமடைந்து நலம் பெறுவார் என்று கூறினார்.

Comment

Successfully posted