மனிதக்கறி சமைத்து தின்ற 12 வயது சிறுமி

Oct 04, 2018 10:50 PM 259

 

காதலனுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை கொலை செய்து உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட 12 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவருடைய பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விசாரணையில் அந்த சிறுமி, 22 வயதுள்ள இளைஞருடன் வசித்து வருவது தெரியவந்தது.

இதனிடையே அந்த சிறுமி தன்னுடைய முகநூல் பக்கத்தில், "நான் ஒரு வேட்டைக்காரனை விரும்புகிறேன். நான் யாருக்காகவும் அவரை விட்டு கொடுக்க மாட்டேன். அவரை தவிர வேறு யாரும் எனக்கு தேவையில்லை" என பதிவிட்டிருந்தார்.

சிறுமி தங்கியிருந்த இடத்திற்கு வந்த போலீசார்,அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது மனித மூளை சமைக்கப்பட்ட நிலையிலும், உடலின் பல்வேறு பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சிடைந்தனர்.

அந்த சிறுமி கோடரியை கொண்டு அலெக்சாண்டர் போபோவிச் என்ற 21 வயது இளைஞரை கொலை செய்துள்ளார். அவருக்கு உடந்தையாக 22 வயதான வேட்டைக்காரர் ஒருவரும் இருந்ததும் தெரியவந்தது.

சிறுமியை கைது செய்துள்ள போலீசார், பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அவரை சேர்த்துள்ளனர்.

Related items

Comment

Successfully posted