பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Oct 02, 2018 11:05 AM 300

பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் விலை 90 ரூபாயை நெருங்குவதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பெட்ரோலிய பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் உயர்த்தி வருகின்றன. இதனால், இதுவரை இல்லாத அளவு பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

அதன்படி, பெட்ரோலிய பொருட்களின் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து, 87 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 64 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. பெட்ரோல் விலை 90 ரூபாயையும், டீசல் விலை 80 ரூபாயையும் எட்டுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted