மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர்

Sep 03, 2018 01:08 PM 833

சென்னை அண்ணா நகரில் உள்ள அம்மா அரங்கில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மகன் அருண்குமார் - திவ்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள், சி. வி. சண்முகம், செங்கோட்டையன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், துரைகண்ணு, காமராஜ், விஜயபாஸ்கர், சேவூர் ராமசந்திரன், சரோஜா, வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர் வைகை செல்வன், அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்களும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Comment

Successfully posted