மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நல்ல ஒத்துழைப்பு -ராமதாஸ் அத்வாலே

Sep 03, 2018 01:04 PM 512

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி நல்ல ஒத்துழைப்பு தருவதாக குறிப்பிட்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக பாஜகவுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பார் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Comment

Successfully posted