குகையில் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள் விரைவில் வீடு திரும்புகிறார்கள்

Jul 14, 2018 05:41 PM 570

தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் மருத்துவமனையிலிருந்து அடுத்தவாரம் வீடு திரும்புவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தம் லுவாங் மலை பகுதியில், கால்பந்தாட்ட அணி சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உட்பட 13 பேர் கடந்த 23ஆம் தேதி மலையேற்றப் பயிற்சிக்காக சென்றனர். அப்போது பெய்த கன மழை காரணமாக குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்கு பிறகு 13 பேரும் சிக்கிக்கொண்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

3 கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் சியாங் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அடுத்தவாரம் சிகிச்சை முடிந்து அனைவரும் வீடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted