சர்க்கரை ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் !இருளில் தவித்த மக்கள் !

Oct 02, 2018 01:16 PM 458

கும்பகோணம் அருகே சர்க்கரை ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அங்குள்ள குடியிருப்பில் வசிக்கும் மக்கள் இருளில் தவித்தனர்.

கும்பகோணத்தை அடுத்த கோட்டூரில் தனியாருக்கு சொந்தமான அம்பிகா சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி முதல் ஊதியம் வழங்கப்படவில்லை.

இதைக் கண்டித்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஆலை நிர்வாகம் மின்கட்டணம் செலுத்தாதமல் உள்ளது.

இதைத்தொடர்ந்து, நேற்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலையின் குடியிருப்பு பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அங்கு வசிக்கும் ஊழியர்கள் அவதிக்கு ஆளாகினர்.

Comment

Successfully posted