உடல்நிலை சீரானது -விஜயகாந்த்

Sep 02, 2018 03:25 PM 544

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே உள்ள உடல் பிரச்சனைகளால் அவருக்கு சுவாச கோளாரு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விஜயகாந்த், தற்போது உடல் நலம் தேறியதையடுத்து, இன்று அவர் வீடு திரும்பினார். அவரின் உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted