செம்மரம் கடத்தல் - ஒருவர் கைது

Jul 23, 2018 04:14 PM 824

 

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்த கும்பலை பிடிக்க முயன்றனர். போலீசாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பியோடினர். அதில், ஒருவரை பிடித்த ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,   திருவண்ணாமலையை சேர்ந்த சுவாமிநாதன் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மற்றவர்களை பிடிக்க வனப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted