வீட்டின் பூட்டை உடைத்து, 15 பவுன் நகை, ரூ.40,000 கொள்ளை

Oct 09, 2018 11:32 AM 432

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 15 பவுன் நகை மற்றும் ரூ.40,000  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாஜ் பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் கணேஷ் வசித்து வருகிறார். இவர் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைதார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40,000 ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comment

Successfully posted