வால்பாறை அருகே நியாயவிலை கடைக்குள் புகுந்த காட்டு யானைகள்

Oct 07, 2018 04:55 PM 457

வால்பாறை அருகே நியாயவிலை கடைக்குள் புகுந்த காட்டு யானைகள் பொருட்களை சேதப்படுத்தின.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அங்குள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறிய 7 காட்டு யானைகள், தோணிமுடி மற்றும் தாய்முடி தேயிலை தொட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்தன.

அங்குள்ள நியாயவிலை கடையில் இருந்த பொருட்களை அவை சேதப்படுத்தின. தகவல் அறிந்து விரைந்த வனத்துறை அதிகாரிகள் தீப்பந்தங்களை கொளுத்தியும், பட்டாசுகளை வைத்தும் யானைகளை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டன.

Comment

Successfully posted