பெட்ரோல் விலை கிடுகிடு! இன்று எவ்வளவு தெரியுமா?

Sep 07, 2018 11:18 AM 579

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதன்காரணமாக காய்கறிகள் மற்றும் அத்யாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இன்று பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு 83 ரூபாய் 13 காசுகளாக விற்பனையாகிறது. டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 17 காசுகளாகவும் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதையொட்டி பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.

Comment

Successfully posted