சீனாவில் தீ விபத்து ; 19 பேர் உயிரிழப்பு

Jul 13, 2018 05:31 PM 993

சீனா ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிச்சுவான் மாகாணம் அருகே, ரசாயன ஆலை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுத்துள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர், வெகுநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்த கட்டடங்களில் சிக்கி தீக்காயங்களுடன் 31 பேர் மீட்கப்பட்டனர்.

Comment

Successfully posted