குவியல்,குவியலாக மனித எலும்பு கூடுகள்

Sep 04, 2018 05:36 PM 589

இலங்கையில் மன்னார் நகரில் உள்ள வணிக வளாகத்தில் தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகிறது.60 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வில் இது வரையில் 111 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.97 மனித எலும்புக் கூடுகள் வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. மேலும் 14 மனித கூடுகளை அகற்றும் பணியின் போது அதிகளவில் மனித மண்டைகள் காணப்படுவதால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இது வரை அகற்றப்பட்ட எலும்புக் கூடுகளில் இருந்து எந்த விதமான தடயங்களும் கிடைக்காததால் இறந்தவர்கள் இலங்கை தமிழர்களாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

Comment

Successfully posted