கர்நாடக அணைகளுக்கு சிறப்பு பூஜைகள்

Jul 18, 2018 12:24 PM 954

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கர்நாடகாவின் முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. கர்நாடக அணைகள் கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி நாளை சிறப்பு பூஜை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அணைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக, கர்நாடகா அரசு சார்பில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதையடுத்து, கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், கர்நாடக அணைகளில் நீரின் அளவு முழு கொள்ளளவிற்கு இருக்க வேண்டும் என்பதால், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு படிபடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு 83 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted