இடுப்பு பெல்ட்டில் மறைத்து வைத்து கடத்தி வந்த 3 தங்க கட்டிகள் கண்டுபிடிப்பு !

Oct 08, 2018 08:40 AM 280

தோகாவில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோகாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இடுப்பு வலிக்காக அணிந்து வந்த பெல்ட்டை கழற்றுமாறு அதிகாரிகள் கூறிய போது, சென்னையை சேர்ந்த ஐதுரூஸ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்திய போது, இடுப்பு பெல்ட்டில் 3 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் எடை ஒன்றரை கிலோ ஆகும்.

இதைத்தொடர்ந்து ஐதுரூஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட தங்க கட்டிகளின் மதிப்பு 46 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comment

Successfully posted