பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

Aug 20, 2018 03:26 PM 477

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் கடந்த சனிக்கிழமை பொறுப்பேற்றார். இந்தநிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் இல்லத்தில் ஆடம்பரம் தலை விரித்தாடுவதாக குற்றம்சாட்டினார். இதனால் மக்கள் நலதிட்டங்களுக்கு செலவிட பணம் இல்லாமல் போவதாக வேதனை தெரிவித்த இம்ரான் கான், பிரதமரின் வெளிநாட்டு செலவை குறைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். வீண் செலவை குறைக்கும் விதமாக, பிரதமர் இல்லத்தில் தங்க போவதில்லை என்று தெரிவித்த அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக, ராணுவச் செயலாளர் வீட்டில் தங்க இருப்பதாக கூறினார்.

 

Comment

Successfully posted