குண்டர் சட்டத்தில் சிக்கி கொண்ட கொள்ளையர்கள்

Sep 27, 2018 12:30 PM 437

வேலூர் அருகே தொடர்  கொள்ளையில்  ஈடுபட்டு வந்த மூன்று கொள்ளையர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,பூட்டிய வீடுகளில் கொள்ளை மற்றும் இருசக்கர வாகன திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

இவற்றில் தொடர்புடைய யுவராஜ், சுகுமார், மோகன் மூவரையும் ஜூலை மாதம் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தனித்தனியே 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன.


இந்தநிலையில், 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேலூர் மாவட்ட எஸ்.பி பர்வேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தர விட்டுள்ளார்.

Comment

Successfully posted