மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் வேலுமணி!

Oct 01, 2018 12:22 PM 431

மழைநீர் சேகரிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசார ஊர்தியை
தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள்
செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பிரசாரம் இன்று முதல் 15 நாட்களுக்கு நடைபெறும். சென்னை
குடிநீர் வாரிய அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து 6 பிரச்சார ஊர்திகள் மூலம் தினமும் காலை 10 மணி முதல்
மாலை 6 மணி வரையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு
முதன்மை செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related items

Comment

Successfully posted

Super User

Respected sir Good work sir