மழைநீர் சேகரிப்பை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் நபர்களின் சிறப்பு தொகுப்பு

Jul 16, 2019 06:00 PM 329

சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் மழை நீர் சேகரிப்பை வெற்றிகரமாக செயல்படுத்தும் நபர்கள் குறித்து விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை பம்மல் நகரில் வசிப்பவர் இந்திர குமார், ,ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவராக இருக்கிறார். இவருடைய வீட்டில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

மழை நீர் சேகரிப்பிற்காக வீட்டு முன்பாக 4 தொட்டிகளும், மாடியில் மழை நீர் விழும் போது அவை ஒரு தொட்டியில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டியில் கூழாங்கற்கள் நிரப்பப்பட்டு மழை நீர் வடிக்கட்டபட்டு பின்னர் மழைநீருக்கென அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் விடப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீரில் 20 தேற்றான் கொட்டைகளை போட்டால் அசுத்தங்கள் எல்லாம் நீங்கி பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கிறது.

பம்மல் பகுதியில் பல இடங்களில் நிலத்தடி நீர் 300 அடிக்கு கீழ சென்று விட்ட நிலையில் இந்திரகுமாரின் பல்வேறு முயற்சியால் அவருடைய வீட்டில் 158 அடிக்கு நிலத்தடி நீர் கிடைக்கிறது.

நாளுக்கு நாள் பெருகி வரும் தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதிகள் அதனால் அதிகரித்து வரும் மக்கள் தொகை என்று தொடர் வளர்ச்சியிலேயே இருக்கும் பகுதி ஓஎம்ஆர் சாலை. மக்கள் தொகை அதிகம் என்பதால் தண்ணீர் வினியோகமும் கூடுதலாக தேவைப்படுகிறது. இந்த பகுதியில் தான் அமைந்திருக்கிறது சபரி டேரஸ். இங்கு மழை நீர் சேகரிப்பு திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதற்காக தனி தொட்டி அமைக்கப்பட்டு கடந்த வருடம் மட்டும் இந்த அபார்ட்மெண்டில் 10 லட்சம் லிட்டர் மழை நீர் சேகரிக்கப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் அதை 30 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்

இந்த அபார்ட்மெண்ட் கட்டப்பட்ட புதிதில் வெறும்பார்வைக்காகவே அமைக்கப்பட்டு இருந்த இந்த மழை நீர் சேகரிப்பை மீண்டும் மீட்டெடுப்பதின் மூலம் தங்களுடைய தண்ணீர் தேவையை பெருமளவு குறைத்திருக்கின்றனர் இந்த அபார்ட்மேண்ட் வாசிகள். மேலும் இந்த வருடம் மழை நீர் சேகரிப்பிற்காக புது திட்டத்தையும் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கிறார் பிரபா கோடா.

இவர்கள் மட்டுமல்ல இவர்களை போல பல தனிபர்கள் மற்றும் குடியிருப்புகள் தற்போது மெல்ல மெல்ல தண்ணீர் சிக்கனம் மற்றும் மழை நீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வை அறிந்து வருவது காலத்தின் கட்டாயம். தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவதால் மழை நீரை சேமிப்போம். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.

Comment

Successfully posted