ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம், கேரளாவில் ஆட்சி மாற்றம் தேவை - பொன்.ராதாகிருஷ்ணன்

Oct 07, 2018 04:57 PM 242

ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரளாவில் ஆட்சி மாற்றம் தேவை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவிற்கு, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி சிலைகள் எடுத்துச் செல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து மன்னர் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தால் கேரள,தமிழக உறவில் விரிசல் ஏற்படாது என்று அவர் கூறினார்.

கோவில் விதிமுறைகளுக்கு மாறான உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த அவர், இதற்கு தீர்வு காண கேரளாவில் ஆட்சி மாற்றம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related items

Comment

Successfully posted