மீன்கள் குறித்து வதந்தி வேண்டாமே - அமைச்சர் ஜெயக்குமார்

Jul 13, 2018 05:57 PM 1105

மீன்களில் பார்மலின் கலக்கப்படுவதாக வெளியான செய்தி வதந்தி என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மீன்களில் பார்மலின் கலக்கப்படுவாக வெளியான செய்தி குறித்து, உணவு பாதுகாப்புதுறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெயகுமார் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மீன்களில் பார்மலின் கலக்கப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறு என குறிப்பிட்டார்.

மீன்களை பதப்படுத்த பாதிப்பில்லாத வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், பார்மலினின் தேவை இங்கு இல்லை என தெரிவித்தார். வதந்தி ஏற்படுத்தும் விதமாக வெளியான செய்தியால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதுகுறித்து பொதுமக்கள் அஞ்ச தேவையில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.

Comment

Successfully posted