தொடரும் பெட்ரோல் விலை உயர்வு! - விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்

Sep 14, 2018 08:20 AM 458

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் புதிய உச்சத்தை தொட்டு, வாகன ஓட்டிகளை கவலையடையச் செய்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோலிய பொருட்களின் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. துவக்கத்தில் 2 காசு, 5 காசு என ஒரு இலக்க பைசா அளவில் அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது, 25 காசு, 40 காசு என இரண்டு இலக்க பைசா அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 84 ரூபாய் 49 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 49 காசுகளாக விற்பனையாகிறது.

Comment

Successfully posted

Super User

நாளையும் விலை ஏறும்