டிப்ளமோ நர்சிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம்

Jul 23, 2018 01:37 PM 605

தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், இரு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல், வரும் 30ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்தவர்கள், இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம். உள்ளிட்ட பாரா மெடிக்கல் படிப்புகளில் சேர முடியாதவர்கள் இந்த படிப்பில் சேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும், வரும் 31ஆம் தேதிக்குள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ செயலாளருக்கு வந்து சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted