நொய்யல் ஆற்றின் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டம்

Mar 07, 2019 06:39 PM 252

கோவை மாவட்டம் பேரூரில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூமி பூஜைகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். பேரூரில், பேரூராட்சி நபார்டு 2019- 20ஆம் ஆண்டு நிதியின் கீழ் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பேரூர் - வேடபட்டி நொய்யல் ஆற்றின் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இதேபோல், மத்வராயபுரம் ஊராட்சியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தும் திட்டம், 12 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் திட்டம், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் அமைக்கும் பணி, 46 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தும்பிலி பாளையம் மற்றும் நல்லூர் அருகே மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Comment

Successfully posted