ஆதாரில் உள்ள தகவல்களை பாதுகாக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்...

Jul 28, 2018 03:13 PM 776

ஆதார் சட்டம் தொடர்பான திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் அறிக்கை வழங்கியுள்ளது. அதில், குடிமக்களின் உரிமைகளை காக்கவும்,  அத்து மீறுபவர்களுக்கும்  அபராதம் விதிக்கவும் தண்டனைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரத்யேக அடையாள ஆணையத்தை தனி அதிகாரம் படைத்த அமைப்பாக மாற்றும்படியும் அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும்  ஸ்ரீகிருஷ்ணா விசாரணை ஆணையம் அறிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

Comment

Successfully posted