இந்தியா - இங்கிலாந்து வெல்லப்போவது யார்?

Jul 14, 2018 10:57 AM 1127

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா , இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி  பெற்று, தொடரை வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று சமநிலையை ஏற்படுத்த இங்கிலாந்து வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comment

Successfully posted