இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி

Jul 17, 2018 10:48 AM 549

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் நடந்த டி20 தொடரில் 2-1 என்ற  கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன. இதனிடையே, முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மாலை நடைபெறுகிறது. தொடரை வெல்லும் அணியை தேர்வு செய்யும் இந்த போட்டியில், சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடைசி  வரை போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

Comment

Successfully posted