அவதூறு பரப்புபவர்களிடம் தொடர்பு கூடாது - ரஜினி மக்கள் மன்றம்

Sep 17, 2018 08:30 PM 462

 ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்ற சீரமைப்பிற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தலைமைக்கு தெரியாமல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவதூறு பரப்பப்படுகிறது.

மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட ஓரிருவர் இவ்வாறு அவதூறு பரப்பி வருவதாகவும், மன்ற உறுப்பினர்கள் இந்த அவதூறுகளை புறந்தள்ள வேண்டும் எனவும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

அத்தகைய அவதூறு பரப்புபவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் மீது மன்ற கட்டுப்பாட்டை மீறிய செயலுக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted