சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Jul 20, 2018 10:59 AM 934

கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரச் சான்று பெற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்தார். இந்தநிலையில் இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா, தனிநீதிபதியின் உத்தரவை தள்ளுபடி செய்தனர். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரச் சான்று பெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Comment

Successfully posted