மத்திய நிதியமைச்சர் பியுஷ் கோயலை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசினர்

Jul 26, 2018 12:32 PM 1116

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் பியுஷ் கோயலை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உடன் இருந்தார். அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி எடுத்துச்செல்ல கூடுதல் ரயில் பெட்டிகள் ஒதுக்க வேண்டும், சாலை திட்டங்கள் மற்றும் உள்ளாட்சி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதியளித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted