வேகமாக நிரம்பி வரும் மஞ்சளாறு அணை - கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

Oct 20, 2018 08:34 PM 573

தேனி, மஞ்சளாறு அணை 53 அடியை எட்டியுள்ளதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மஞ்சளாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.

அணைக்கான நீர்வரத்து 136 கன அடியாக உள்ள நிலையில், விரைவில் முழு கொள்ளளவான 57 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணை 53 அடியை எட்டியுள்ள நிலையில், மஞ்சளாறு ஆற்றின் கரையோரம் உள்ள தேவானம்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட 4 கிராம மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted