அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 16-ஆம் தேதி கூடுகிறது

Jul 13, 2018 05:12 PM 1956

சென்னையில் வரும் 16-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அன்றைய தினமே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்படும் என்றும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் முன்வைக்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்தும், இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted