சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

Jul 10, 2018 11:42 AM 1923

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கில் தொடர்புடைய சான்றுப் பொருட்களை பறிமுதல் செய்ததில் உரிய சட்டவிதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று தஷ்வந்த் தரப்பில் கூறப்பட்டது.

சாட்சிகளும் முன்னுக்குபின் முரணாக சாட்சியம் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தஷ்வந்த் கோரியிருந்தார். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது. கடந்த ஆண்டு சென்னை போரூரை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை, பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தனது தாயார் சரளாவை கொலை செய்து தலைமறைவானார். இந்தநிலையில், மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Comment

Successfully posted